சேகர் ரெட்டியின் உறவினர்... போட்டுக்கொடுத்த விஐபி... ED ரேடாரில் சிக்கிய வேலூர் ஹோட்டல் அதிபர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மேத்தாகிரி ரெட்டி என்கிற மேத்தா கிரிதரன்.
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினரான மேத்தாகிரி `சாய் சுப்ரபாதம்’ என்கிற சைவ ஹோட்டல்களின் அதிபராகவும் இருக்கிறார்.
வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை அவுட் கேட் அருகிலும், வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலும் இவரின் ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு, வேலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறத்திலும் சாய் சுப்ரபாதம் கஃபே ஷாப்பையும் திறந்திருக்கிறார் மேத்தாகிரி.
அதுமட்டுமல்லாமல், `வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கம்’ என்கிற சங்கத்திலும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக மேத்தாகிரி இருந்துவருகிறார்.

சேகர்ரெட்டியின் உறவினர், ஊர்க்காரர் எனக் காட்டிக்கொள்ளும் மேத்தாகிரி அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டினாலும், தி.மு.க அனுதாபியாகவே தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார்.
இந்நிலையில்தான் அமலாக்கத்துறையின் ரேடாரில் சிக்கியிருக்கிறார் மேத்தாகிரி. அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் நேற்று (மே 6) விடியற்காலை தொண்டான்துளசி கிராமத்திலிருக்கும் மேத்தாகிரியின் வீட்டுக்குச் சென்றனர்.
காலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் சென்று சோதனையைத் தொடங்கிய அமலாக்கத்துறையினர், மேத்தாகிரி பயன்படுத்தும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆய்வுசெய்தனர்.
பணப்பரிவர்த்தனை டீலிங் தொடர்பாக அமலாக்கத்துறையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
சொத்துகள், நகைகள், அவை வாங்கப்பட்ட விபரங்களையும் அலசியிருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்தச் சோதனை மாலை 5 மணியளவில் நிறைவுற்றது.
வருவாய்க் கணக்குத் தாக்கல் செய்யப்படாத சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி எடுத்துச்சென்றதாகவும் தெரியவருகிறது.

இந்தச் சோதனையின் பின்னணி குறித்துப் பேசுகிற வேலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், "வேலூரில் ஹோட்டல் பிசினஸில் கோலோச்சும் பிரபல வி.ஐ.பி ஒருவர்தான் அமலாக்கத்துறையினரிடம் தன்னைப் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது மேத்தாகிரி தரப்பு.
காரணம், அந்த வி.ஐ.பி-யும் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சாதி சங்கத்தில் கௌரவத் தலைவராகவும் இருப்பவர்.
மேத்தாகிரியின் வளர்ச்சியை விரும்பாத அந்த வி.ஐ.பி தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அந்த வி.ஐ.பி குழுமத்துக்குச் சொந்தமான ஹோட்டல்கள் மட்டுமே வேலூரை ஆக்கிரமித்திருக்கின்றன. மற்றவர்களின் வளர்ச்சியை அவர் எப்போதுமே விரும்புவதில்லை. போட்டியாளர்களை வீழ்த்த அவர் எந்த எல்லைக்கும் சென்று குடைச்சல் கொடுப்பார்’’ என்கின்றனர் புலம்பியவாறு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs