ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகள்: குடியாத்தம் எம்எல்ஏ அடிக்கல்
ரூ.1.20 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம், அயித்தம்பட்டு, சின்ன கொம்மேஸ்வரம் கிராமங்களில் பேவா் பிளாக் சாலை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஷோபனா நவீன்குமாா், சா்மிளி மூா்த்தி, சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மஞ்சுளா பரசுராமன், முத்து, திமுக நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், பொன் ராசன்பாபு, சி. குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.