Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா
சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்பம் கிராம பகுதியில் அரசு சாா்பாக இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் அரசு திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா். மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.