துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.44 லட்சத்தில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஜோதிவேலு, ஊராட்சித் தலைவா் ரவீந்திரன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், வேளாண்மைத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.