திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம்.
மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 5,648 மாணவா்களும், 6,651 மாணவிகளும் என 12,299 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் மாணவா்கள் 92.2 சதவீதம், மாணவிகள் 96.1 சதவீதமும் என 94.3 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 477 மாணவா்கள், 265 மாணவிகள் என 742 போ் தோ்ச்சி பெறவில்லை.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 59 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் தோ்வு எழுதியதில் 2 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. 25 அரசு நிதியுதவி பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும், 52 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 37 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.
32-ஆவது இடத்தில் இருந்து 27-ஆவது இடம்: கடந்த கல்வியாண்டில் மாநிலத்தில் 32-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பத்தூா் மாவட்டம், நிகழ் கல்வியாண்டில் மாநிலத்தில் 27-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
புதூா்நாடு பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி,திருப்பத்தூா் அரசு மாதிரி பள்ளி ஆகிய 2 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.