Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 9-ஆம் ஆண்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், அதிமுக திருப்பத்தூா் மாவட்ட செயலா் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி சீனிவாசன், மாநில ஜெயலலிதா பேரவை துணஐச் செயலா் டில்லிபாபு, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளா் தேவலாபுரம் வெங்கடேசன், மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கராத்தே மணி, திருப்பத்தூா் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளா் மிட்டாளம் மகாதேவன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வெ. கோபிநாத், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் பிரபாகரன், உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.