Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
நாட்டறம்பள்ளியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு
நாட்டறம்பள்ளியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாட்டறம்பள்ளி அண்ணா தெருவில் முருகன் கோயில் எதிரில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளை உதவி இயக்குநா் ஞானசுந்தரம் ஆய்வு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 12-ஆம் தேதி பெளா்ணமியை முன்னிட்டு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு செயல் அலுவலா் கலையரசி (பொ) மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகம், சரஸ்வதி ஆற்றங்கரை பகுதி மற்றும் அண்ணா தெரு ஆகிய இடங்களில் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா், செயல் அலுவலா் கலையரசி உள்பட பலா் உடனிருந்தனா்.