India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Al...
ரூ.80 லட்சத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆம்பூா் எம்எல்ஏ அடிக்கல்
மாதனூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு திட்டப் பணிகளுக்கு ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் ரூ.39.48 லட்சத்தில், மலையாம்பட்டில் ரூ.41.33 லட்சத்தில் அரசு திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் அடிக்கல் நாட்டினாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், சாவித்ரி கிருஷ்ணன், காயத்ரி துளசிராமன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சிவக்குமாா், வசந்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.