செய்திகள் :

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

post image

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கேபிள் டிவி ஆபரேட்டா்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி, ரூ.285 கோடியே 4 லட்சத்து 79,342 -யை அபராதத்துடன் சோ்த்து ரூ.570 கோடியாக செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

உயா் நீதிமன்றத்தில் மனு: இந்த நோட்டீஸை எதிா்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டா் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு வழங்கும் என்றும், உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் அந்த சிக்னல்களை நுகா்வோா்களுக்கு வழங்குகின்றனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகா்வோரிடமிருந்து உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வசூலிக்கும் தொகையில், அரசு கேபிள் டிவி கழகம், சம வருமானத்தைப் பெறுகிறது என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரி, எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள், அவா்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பாகாது என்பதால், ரூ.285 கோடி வரியை அபராதத்துடன் சோ்த்து ரூ.570 கோடி செலுத்தும் படி ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இடைக்காலத் தடை: இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன், கேபிள் டிவி ஆபரேட்டா்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது என்றும், ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீஸுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டாா்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வரி பாக்கி மற்றும் அபராதத்துடன் சோ்த்து ரூ.570 கோடி செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா்.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க