‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கல...
ரூ.17 கோடியில் கைக்கடிகாரம்.. இந்த வார கேட்ஜெட்களில் ரிச்சர்ட் மில்லி!
ரிச்சர்ட் மில்லி நிறுவனம் சுமார் ரூ.17 கோடியிலான கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்துள்ளது.
ரிச்சர்ட் மில்லி - ஆர்எம்75-01 (Richard Mille - RM75-01)
ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் ஆர்எம்75-01 என்ற புதிய வகை கைக்கடிகாரத்தை வெளியிட்டுள்ளனர். இது லிமிட்டெட் எடிசனில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலையைக் கேட்டால் அனைவருக்குமே தலையே சுற்றிவிடும். இதன் விலை: ரூ.17 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (அதாவது 20 லட்சம் அமெரிக்க டாலர்கள்)
பொறியியல் துறையில் அழகு சேர்க்கும் விதமாக ஸ்கெலிடன் வடிவம் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளிருக்கும் பாகங்கள் அனைத்தும் தெரியும் வகையில் இந்த கடிகாரம் மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் மேலும் சிறப்பு.

இதில் இருக்கும் வடிவமைப்பு நீலமணி என்னும் சஃபையரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரிக்க 1000 மணி நேரத்துக்கும் மேல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், டைட்டானியம் தகடுகள், தங்கப் பட்டைகள், லிமிட்டெட் தயாரிப்பு என்பதால் மிகவும் குறைவாகவே இந்த கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கிளியர் சஃபையர் என்று சொல்லப்படக்கூடிய நில நீறத்தில் 15-ம், லைலாக் டிண்ட், புளூ டிண்ட் ஆகிய வகைகளில் தலா 10-ம் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கைக்கடிகாரம் 32.90 × 46.75 × 14.35 மில்லி மீட்டர் நீளம், அகலம், உயரம் கொண்டது.
இதையும் படிக்க: ரூ.34 லட்சத்தில்..! நவீன வசதிகளுடன் சேலஞ்சர் எலைட், பர்சூட் எலைட்!
