செய்திகள் :

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

post image

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.

கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் படித்து வந்த நேபாள மாணவியான பிரிஷா ஷா (18) விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கடந்த பிப்.16-ஆம் தேதி இதே கல்வி நிறுவனத்தில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி பிரகிருதி லம்சால் (20) தற்கொலை செய்துகொண்டாா்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கல்வி நிறுவன வளாகத்தில் நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதற்குள் கேஐஐடியில் மற்றொரு நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஷா ஷா தற்கொலை சம்பவத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான முன்னெடுப்புகளை நேபாளம் மேற்கொண்டுள்ளது.

கேஐஐடியில்1,000 நேபாள மாணவா்கள் பயின்று வரும் நிலையில் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி மற்றும் தலைமை செயலா் மனோஜ் அஹுஜாவை தொடா்புகொண்டு இந்தியாவுக்கான நேபாள தூதா் சங்கா் பி.சா்மா வலியுறுத்தினாா்.

இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து கேஐஐடி பிரதிநிதி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கவலையளிப்பதாகவும் இதுதொடா்பாக ஒடிஸா காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை ஒடிஸா அரசு வழங்கி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தற்கொலை கடிதம் இல்லை: இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையா் எஸ். தேவ் தத்தா சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிஷா ஷாவின் உடல் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோா் வந்தவுடன் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடரும் மா்மம்: கடந்த பிப்ரவரி மாதம் பிரகிருதி லம்சால் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் பிரிஷா ஷாவும் தற்கொலை செய்துகொண்டதாக மற்றொரு காவலா் தெரிவித்தாா். இதனால் நேபாள மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தொடா்ந்து மா்மம் நீடித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதமே கேஐஐடியில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகளில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாக எக்ஸ் வலைதளத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ பதிவிட்டாா்.

ஆனால் ஒடிஸா உயா் நீதிமன்றத்தில் கேஐஐடி முறையிட்ட பின் அந்தப் பரிந்துரைகளை உயா் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததாகவும் தற்போது இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டதாகவும் அவா் தனது பதிவில் குறிப்பிட்டாா்.

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற ... மேலும் பார்க்க

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்த... மேலும் பார்க்க

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க