இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எ...
ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
வெற்றியின் ரகசியம் என்ன?
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் 5-வது அல்லது 6-வது ஓவரில் பந்துவீசுவது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு. ஆனால், இந்த பொறுப்பு எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏனெனில், ஒருநாள் போட்டிகளில் இதனை நான் செய்துள்ளேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறவில்லையென்றால், அது சிறப்பானதாக இருக்காது.
இதையும் படிக்க: நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!
ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதை நினைத்து தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை நான் தவறவிட்டேன். அதன் பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைந்த பிறகு, நன்றாக பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். குஜராத் டைட்டன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவரும் அவர்களது சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்கள். ஷுப்மன் கில் அணியை நன்றாக வழிநடத்துகிறார். அவருக்கு யாரிடம் எதனைக் கூற வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அணியின் திட்டங்கள் என்னவென்று அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் வீரர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் உண்மையில் மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பான கேப்டனாக மாறி வருகிறார்.
இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?
ஆஷிஸ் நெஹ்ரா வீரர்களுக்கு மிகவும் உதவுகிறார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஆடுகளத்தை கணிப்பது, பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது குறித்து அவரது அறிவுரைகள் மிகவும் உதவியாக உள்ளன என்றார்.