மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!
ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அருகிலிருந்த வயல்வெளிக்கு 9 பேர் அடங்கிய கும்பல் கடத்திச் சென்றனர். அதுமட்டுமின்றி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிக்கு வியாழக்கிழமையில் தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவருக்கு ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி, தேர்வெழுத அனுமதித்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து, வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றவாளிகளும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவவில் வைக்க உத்தரவிட்டது.