செய்திகள் :

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

post image

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் முதல்கட்ட முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இதன்மூலம், இந்த தேர்தலில், ஆளுங்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சிக்கு மக்கள் பேராதரவு அளித்திருப்பதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

இத்தேர்தல் வெற்றி மூலம், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரெலிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ஆல்பனீஸி மீண்டும் பிரதமராகத் தொடர்ந்து அந்நாட்டு அரசை வழிநடத்த உள்ளார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவில் கடந்த இருபது ஆண்டுகளில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஒருவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான பீட்டர் டட்டன், இந்தத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டிருப்பதுடன், தாம் போட்டியிட்ட டிக்சனில் ஆளுங்கட்சி வேட்பாளர் அலி பிரான்சிடம் தோல்வியடைந்துள்ளார்.

இந்தநிலையில், தேர்தல் தோல்விக்கு தாமே முழு பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ‘இத்தோல்வியானது நாம் யார் என்பதை தீர்மானித்து விடாது’ என்று தமது கட்சிக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.

‘தொழிலாளர் கட்சிக்கு இதுவொரு வரலாற்று வெற்றி. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றும் அவர் மனதாரப் பாரட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் தாம் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த வரலாறு மக்களின் தீர்ப்பால் மாற்றப்பட்டிருக்கிறது.

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் ஆல்பனீஸி பேசுகையில், “ஆஸ்திரேலியாவின் மதிப்புகளுக்காகவும், எதிர்காலத்துக்காகவும், உலகளாவிய சவால்களை ஆஸ்திரேலியாவுக்கே உரிய பாணியில் எதிர்கொள்ளவும் இன்று, ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்னிடையே, ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆன்டனி ஆல்பனீஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்வானதற்கும், இந்த பெரும் வெற்றிக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘இதன்மூலம், ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்புக்கான நமது தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி நகர்த்தவும் நாம் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க