பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா
பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.
பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது, ``எந்த வகையிலும் இந்தியாவில் வன்முறையை ஆதரிக்க முடியாது. பாகிஸ்தானுடன் போருக்கு செல்வது ஒரு தீர்வாக அமையாது.
மக்களைப் பாதுகாக்கத்தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசின் தோல்விக்காக போர் அறிவிப்பது முறையானதல்ல. போரின் இறுதியில் நமது வீரர்களும் இறப்பார்கள்.
போர் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், எந்த வகையிலும் வன்முறைக்கு எதிரானதுதான். வன்முறை யாருக்கும் பயனளிக்காது’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!