பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் நேற்று (மே.2) விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தார். இது நடிகையின் அசலான வலைதள பக்கம் கிடையாது.
இந்தச் சர்ச்சையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் விராட் கோலி கூறியதாவது:
லைக் செய்தது ஏன்? கோலி விளக்கம்
எனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளியர் சர்ச் ஃபீட் செய்யும்போது அல்காரிதத்தின் தவறுதலால் விருப்பக் குறியிட்டதாகக் காட்டியிருக்கும். இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
தேவையில்லாத ஊகங்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, விராட் கோலி அந்தப் பக்கத்தை அன்லைக் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
