ஐபிஎல்: ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய மின்சக்தி!
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை: லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டி!
2026 ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தமாக 33 போட்டிகள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது. லார்ட்ஸை தவிர்த்து ஓல்ட் ட்ராஃபோர்ட், ஹெட்டிங்லே, எட்ஜ்பேஸ்டன், தி ஓவல், ஹாம்ப்ஷயர் பௌல் மற்றும் பிரிஸ்டல் கவுன்டி ஆகிய திடல்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
இந்தப் போட்டிகள் இரண்டு குழுக்களாக நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ளது. விரிவான அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்கள் தகுதிச் சுற்றில் தேர்வு செய்யப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற 2020 ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியை 86,174 பேர் கண்டுகளித்தனர். மேலும், 2023 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற போட்டியின் டிக்கெட்டுகளும் விரைவில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!