செய்திகள் :

ஆசிய போட்டி 2026: மீண்டும் கிரிக்கெட் தக்கவைப்பு!

post image

ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருக்குமென ஓசிஏ (ஒலிம்பிக் கவுன்சில் ஆஃப் ஏசியா) உறுதியளித்துள்ளது.

ஆசிய போட்டிகள் ஜப்பானில் வரும் செப்.19 முதல் அக்.4ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன.

நகோயா நகரத்தில் ஏஐஎன்ஏஜிஓசி அமைப்பின் கூட்டத்தில் கிரிக்கெட், மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் இரண்டும் சேர்க்கப்பட்டதாக ஓசிஏ தெரிவித்துள்ளது.

இதில் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 வடிவில் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் இடங்கள், அணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட இடம் குறித்து தகவல் ஏதுவும் கூறப்படவில்லை.

ஆசிய போட்டிகளில் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 2010, 2014, 2023இல் கிரிக்கெட் போட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாக். முன்னாள் வீரர் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறி முடக்கப்பட... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி! பாகிஸ்தான் செல்லும் வங்கதேச கிரிக்கெட் அணி!

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறது. வருகிற மே மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி விளையாடவிருப்பதாக பாகிஸ்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் டிம் சௌதி!

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் டிம் சௌதி நியமிக்கப்படவுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த... மேலும் பார்க்க

இலங்கை முத்தரப்பு தொடர்: இந்திய மகளிரணிக்கு அபராதம்!

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய மகளிரணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற மகளிர் முத்தரப்புத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை... மேலும் பார்க்க

சதமடித்த ஷாத்மன் இஸ்லாம்: வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்... மேலும் பார்க்க