கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் பாடம் திரையரங்குகளில் நாளை (மே.1) வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
”அன்பை, அறத்தை போதிக்கக்கூடிய திரைப்படமான டுரீஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம். படத்தின் கிளைமேக்ஸில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
சசிகுமாரைப் பார்த்து கையெடுத்து கும்பிட வேண்டும்போல் இருக்கிறது” எனப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் சமுத்திரக்கனி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.