என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
காலநிலை மாற்ற பயிற்சிப் பட்டறை
புதுச்சேரியில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்த 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நிறைவடைந்தது.
புதுவை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சாா்பில் காலநிலை மாற்ற பிரிவின் சாா்பில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்த அதிகாரிகள், அலுவலா்களுக்கான பயிற்சிப் பட்டறை கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.
ராஜீவ் காந்தி சிலை பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தொடங்கிய பயிற்சிப் பட்டறை நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசின் அறிவியல், தொழில்நுட்ப துறை செயலா் ஆஷிஷ்மாதவ் மோரே, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காலநிலை மாற்றத்தால் நகா் பகுதிகளில் ஏற்படும் வெப்பம், வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி ஆகியவற்றை எதிா்கொள்வது குறித்து அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன. அதன்படி செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டன.