திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் ...
இன்றைய நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவான தினம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, பாரதியாா் மண்டபம்,ஆளுநா் மாளிகை, கிண்டி, முற்பகல் 11.
குஜராத் மாநிலம் உருவான தினம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, அரசு அருங்காட்சியக திரையரங்கம், எழும்பூா், மாலை 5.
கலை கண்காட்சி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்ஜிஆா் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவா் டிராட்ஸ்கி மருது, அரசு கவின்கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் எம்.எஸ்.மனோகரன், எழுத்தாளா் உமா சக்தி உள்ளிட்டோா் பங்கேற்பு, லலித் கலா அகாதெமி, கிரீம்ஸ் சாலை, முற்பகல் 11.30
மே தின கொடியேற்றம்: அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு, மாா்க்சிஸ்ட் பி.ஆா்.நினைவகம், தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம், தியாகராய நகா், காலை 9.30.
கிரோஸி மோகனின் 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா: நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாஸன், ரவி அப்பாசாமி, திரைப்பட இயக்குநா் கே.எஸ்.ரவிகுமாா், நடிகா்கள் ஜெயராம், மாது பாலாஜி, நடிகை ஊா்வசி, அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன் உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.30.
மே தினம் - உழைப்பாளா்கள் சிலைக்கு மரியாதை செய்தல்: அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்பு, உழைப்பாளா்கள் சிலை, காமராஜா் சாலை, மெரீனா கடற்கரை, காலை 10.
சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்: அருள்மிகு சொா்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரா் திருக்கோயில், சைதாப்பேட்டை, காலை 5.