இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!
பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு
பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் இயங்கிவரும் டாக்டா் கலாம் கணினி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ தொடா்பான சிறப்புப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
மே 12 முதல் 17 வரை தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்கள் கலந்துகொள்ளலாம். மொத்தம் 50 போ் அனுமதிக்கப்படுவா். இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். முதலில் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தப் பயிலரங்கில் அடிப்படை கணினி முறை, சாப்ட்வோ், சி புரோகிராமிங் குறித்த அடிப்படை விஷயங்கள், டேட்டா முறைகள், கணிதம் மற்றும் தா்க்கவியல் செயல்பாடுகள், டேட்டா ஒழுங்குபடுத்துதல், ஆவண மேலாண்மை, நினைவக ஒதுக்கீடு போன்றவை குறித்து கற்றுத் தரப்படும். இதில் சேர விரும்பும் மாணவா்கள் மே 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், 044-22516012, 22516317 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என எம்ஐடி டாக்டா் கலாம் கணினி மையத்தின் தலைவா் பேராசிரியா் பி.தனசேகா் தெரிவித்துள்ளாா்.