ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமந்திர நகரான தூத்துக்குடியில் சிவன் கோயில் என்று அழைக்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் பாண்டிய மன்னன் வழிபட்ட சிறப்புப் பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவானது வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது கொடியேற்றமானது நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, விழா கமிட்டியாளர்கள் கந்தசாமி, பி எஸ் கே ஆறுமுகம், ஜெயலட்சுமி செந்தில், சாந்தி, முத்து, மந்திரமூர்த்தி, சண்முகம் பட்டர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் மே 10ஆம் தேதி காலை 10.45 மணிக்கு நடைபெறும்.