சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
‘தோர்’ நாயகனின் புதிய படம் அறிவிப்பு!
‘தோர்’ பட நாயகனானின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் சில படங்களில் ‘அவெஞ்சர்ஸ்’-ம் ஒன்று. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒன்று சேர்த்து உருவான அந்தக் கலவையின் முக்கிய கதாபாத்திரமான தோர்- ஆக நடித்து நீங்காத இடம் பிடித்தவர் ஆஸ்திரேலிய நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வர்த்.
இவர், மீண்டும் தோர்-ஆக ‘அவஞ்சர்ஸ் - டூம்ஸ் டே’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த இயக்குநர் பாட்ரிக் வொல்லார்த் இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அமேசான் எம்.ஜி.எம். ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ’சப்வெர்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படம் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பலினுள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையும், அதனைக் கையாளும் கடற்படை மாலுமியையும் மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இயக்குநர் வொல்லார்த், ‘எவ்ரிதிங் வில் பி ஓகே’, ‘தி ஜாக்கெட்’ உள்ளிட்ட குறும்படங்களையும்; கடத்தப்பட்ட விமானத்தில் சிக்கியுள்ள விமானியைப் பற்றிய ‘7500’ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யார் அகதிகள்? சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி - திரை விமர்சனம்!