செய்திகள் :

உக்ரைனுடன் ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா: 'நான் இல்லையென்றால், புதின்...' ரஷ்யாவை சாடும் ட்ரம்ப்

post image

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார்.

"புதினுக்கு முழு உக்ரைனுமே வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், அவர் முழு உக்ரைனையும் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

நான் இருந்திருந்தால், அவர் உள்ளேயே சென்றிருக்க முடியாது. இந்தத் தோல்வியார்கள் குழுவினால் தான், அவர் உள்ளே சென்றுள்ளார்.

அவர் ஆப்கானிஸ்தானில் நடந்ததை பார்த்து, 'இது தான் நமக்கான வாய்ப்பு' என்று நினைத்திருப்பார்" என்று கூறியிருக்கிறார்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

ஆரம்பத்தில் இருந்து சமீபமாக வரை, 'புதின் என்னுடைய நண்பர்... பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று ரஷ்யாவிற்கும், புதினுக்கும் ஆதரவாக பேசி வந்த ட்ரம்ப், ரஷ்யா உக்ரைன் மீது நடத்தும் தொடர் தாக்குதலால் ட்ரம்ப் மிகுந்த கோபம் அடைந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி தோல்வி பேச்சுவார்த்தையினால், அப்போது கையெழுத்து ஆகவிருந்த அமெரிக்கா - உக்ரைன் கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு, நேற்று இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம், அமெரிக்கா உக்ரைன் பக்கம் நிற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" - புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" - ஓபிஎஸ்

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அ... மேலும் பார்க்க

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படு... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை: வங்கியின் அவமரியாதை; `புதிய சட்டத்தின்படி நடவடிக்கை தேவை' - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்ற மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க