கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?' என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம்.

அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து, முதலமைச்சர் அலுவலகம் என்ன சொல்கிறதோ, அதை வைத்து பள்ளி திறப்பு தள்ளிப்போடப்படுமா என்பது முடிவு செய்யப்படும்" என்று பதில் அளித்துள்ளார்.
அடுத்ததாக, அவரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேட்கப்பட்டது. "ஐந்து மாநில தேர்தல்கள் வர உள்ளது. தேர்தல்களின் போது, மத்திய அரசு இந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs