டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு முயற்சி செய்து வருவதாக செய்திகள் பரவின. ஆனால், இவ்வாறாக பரவிவரும் செய்திகள் உண்மையில்லை என்று நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும், எலான் மஸ்க்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, எலான் மஸ்க் கூறியதாவது, ``அமெரிக்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் துளியளவும் உண்மையில்லை. ஒரு தவறாஅன் செய்தியை வெளியிடுவதும், டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவினரின் தெளிவான மறுப்புச் செய்தியைச் சேர்க்காமல் இருப்பதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறல்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அரசியலில் அதிகளவிலான ஈடுபாடு கொண்டிருப்பதால், அவரால் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை.
அதனால், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து எலானை நீக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்க டெஸ்லா இயக்குநர்கள் குழு முயல்வதாக செய்திகள் பரவி வந்தன.
ஆனால், இந்தச் செய்திகளை மறுத்த டெஸ்லா இயக்குநர்கள் குழு, எப்போதும் எலான் மஸ்க்தான் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறி, மறுத்து விட்டனர்.
இதையும் படிக்க:இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!