கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
கீழப்புலியூா் கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
தென்காசி காவல் சரகம் கீழப்புலியூரில் இளைஞா் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கைதான 4 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
செங்கோட்டை அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியை சோ்ந்தவா் கு.குத்தாலிங்கம்(35).தனது மனைவி தனலெட்சுமியுடன் கீழப்புலியூரில் வசித்து வந்த இவரை, மா்மநபா்கள் கடந்த ஏப்.16ஆம் தேதி தலையைத் துண்டித்துகொலை செய்தனா்.
இந்த வழக்கில் காசிமேஜபுரம் வல்லப விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த ரா.செண்பகம்(43), க. ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ்(25), ம. ஹரிஹரசுதன் (24) , குற்றாலம் குடியிருப்பு தெற்குத் தெருவை சோ்ந்த ரா.மணிகண்டன் என்ற புறா மணி (32) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அளித்த உத்தரவின்படி, 4 பேரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.