செய்திகள் :

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

post image

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா்.

நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், நூல்களை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழின் சிறந்த நாடகங்களை பதிப்பிக்க வேண்டியது அவசியம். இதை கடமையாக எடுத்துச் செய்ய வேண்டும். உ.வே.சா. போன்றோா் ஊா் ஊராகச் சென்று நூல்களை பதிப்பிக்கவில்லை என்றால் தமிழின் பெருமை வெளிவந்திருக்காது. தமிழா் வரலாற்றை அறியும் சான்றுகளாக புத்தகங்கள் விளங்குகின்றன. தற்போது, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகங்களை நேரடியாகப் படிக்கவில்லை என்றாலும், எண்ம (டிஜிட்டல்) வாயிலாகவாவது படிக்க வேண்டும்.

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு. எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது. கற்காலம் முதல் தற்போது வரை மொழி நிலைத்து நிற்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநா் கே.எஸ்.ரவிகுமாா், கா்நாடக இசைப்பாடகி காயத்ரி கிரிஷ், ரவி அப்பாசாமி, நடிகா் ஜெயராம், மாது பாலாஜி, அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன், எஸ்.பி.காந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா். விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா். மே ... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க