வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்
பேரவை நுழைவுவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலி எழுப்பியதால் பரபரப்பு!
சென்னை: தலைமைச் செயலக பேரவை வளாக நுழைவுவாயில் அருகில் தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்ட தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை நுழைவாயில் அருகே தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்டு இருந்த தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்ததால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரிசோதனை செய்ததில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அலாரம் ஒலித்துள்ளது மற்றபடி எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் சரிசெய்யப்பட்டது.