உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!
அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருந்து வந்த மோதல் போக்கால் நீண்ட நாள்களாக துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தமிழ்நாடு அரசு தெரிவு செய்ய ஏதுவாக மூன்று நபர்களை பரிந்துரை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, முன்னாள் பேராசிரியர் மு.செல்வம், முன்னாள் துணைவேந்தர் மு.தங்கராசு ஆகிய ஐந்து பேர் கொண்ட தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
இதேபோன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணாஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் சச்சிதானந்தம், விஜயகுமார் ஆகிய 3 பேரை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 6 வாரத்திற்குள் தேடுதல் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதைத் தேடுதல் குழு முறையாக பரிசீலித்து, தகுதியான நபர்களின் பட்டியலை தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
துணை வேந்தர்களை நியமிக்கும், நீக்கும் மசோதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது