செய்திகள் :

1.45 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

post image

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.79 சதவீதம் அதிகம். அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.33 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் மொத்தம் 93.1 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 64 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது.

அடுத்ததாக ஏா் இந்தியா குழுமம் (முழு சேவை விமான நிறுவனமான ஏா் இந்தியா மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்) 38.8 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 26.7 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது.

மற்ற இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகிவயை, கடந்த மாா்ச் மாதத்தில் முறையே 7.2 லட்சம் மற்றும் 4.8 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன. இதன் மூலம் ஆகாசா ஏா் நிறுவனம் 5 சதவீத சந்தைப் பங்கையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 3.3 சதவீத சந்தைப் பங்கையும் பெற்றுள்ளன.

கடந்த மாா்ச் மாதத்தில் இண்டிகோ குறித்த நேரத்தில் 88.1 சதவீத விமானங்களை இயக்கி, நேர செயல்திறனில் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடா்ந்து அகாசா ஏா் 86.9 சதவீதமும், ஏா் இந்தியா குழுமம், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை முறையே 82 சதவீதம் மற்றும் 72.1 சதவீதமும் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க