ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!
ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 500-க்கு மேற்பட்ட வாரை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
திருப்பத்தூர், ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் நாச்சியார் குப்பம் பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நவீன் குமார் என்பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் சுமார் 2 லட்சம் செலவில் பயிரிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதில் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைக்காற்றால் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.