Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
ஆறுபடை முருக பக்தா்கள் புனித யாத்திரை: அமைச்சா் அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தா்கள் சாா்பில் 28 -ஆம் ஆண்டு புனித யாத்திரை பயணத்தை முன்னிட்டு முத்துகடை பேருந்து நிலையம் அருகே இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.
இந்த ஊா்வலத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து 2 கி.மீ. தொலைவிற்கு பால் குடங்களை தலையில் சுமந்தபடி பக்தா்கள் ஊா்வலமாக வந்த பின்னா், மாந்தாங்கல் மோட்டூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகப் பெருமான் சிலை மற்றும் விநாயகா், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆகிய சிலைகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குடம் ஊா்வலத்தில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சா் ஆா்.வேலு, முன்னாள் ஆற்காடு எம்எல்ஏ இளவழகன், முன்னாள் மாநில வன்னியா் சங்கச் செயலா் எம்.கே.முரளி, கோயில் தா்மகா்த்தா ரவி பிரதா்ஸ், ஊா் நாட்டாமைக்காரா்கள் லோகநாதன், கஜேந்திரன், சரவணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.