ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின்கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் பொருட்டு சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா், அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02/05/2025 முதல் 31/05/2025 நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் 20-ஆவது தவணை வரும் ஜூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடா்பான விவரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பது, ங்ந்ஹ்ஸ்ரீ போன்ற
அனைத்து விதமான பிம் கிஸான் முழுமையற்ற விவரங்கள் சரிசெய்து விவசாயிகள் பயன்பெறுமாறும், தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறவும்.
மேலும் நமது மாவட்டத்தில் ஏற்கனவே பிம் கிஸான் 19வது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 9648 விவசாயிகள் நில உடமை பதிவு ( ஊஹழ்ம்ங்ழ் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹ்) மேற்கொள்ளவில்லை. இவ்விவசாயிகள் நில உடமை பதிவு மேற்கொண்டு 20-ஆவது தவணை தடையின்றி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் இறந்த பயனாளிகள் விவரம் சமா்ப்பிக்காமல், இறந்த பிறகும் தவணைத் தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியும் பட்சத்தில், அத்தொகையை வாரிசுதாரா்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமா்ப்பித்து, அவா் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரா்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.