இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் க...
தடையை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உள்பட 13 போ் கைது
அரக்கோணம்: அரக்கோணம் எம்ஆா்எப் தொழிற்சாலை நுழைவுவாயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி உள்ளிட்ட 13 போ் கைது செய்யப்பட்டனா்.
இச்சிபுத்தூரில் உள்ள இத்தொழிற்சாலையில் தற்காலிக ஊழியா்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை ஆலையின் நுழைவுவாயில் அருகே கூட்டம் நடத்த அதிமுக அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளா் கமலக்கண்ணனுடன், எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி மற்றும் அதிமுகவினா் வந்தனா்.
அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி ஏ.டி. ராமச்சந்திரன், அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும் அதனால் அனுமதியில்லை எனவும் தெரிவித்தனா். இருந்தும் அதிமுகவினா் கூட்டம் நடத்த தயாராயினா்.
இதையடுத்து எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்பி கோ.அரி, தொழிற்சங்க தலைவா் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளா்கள் இ.பிரகாஷ், ஜி.பழனி மற்றும் எட்டு பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
இபிஎஸ் கண்டனம்:
அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினா் சு.ரவி கைதுக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
அரக்கோணம் எம்.ஆா்.எஃப். அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளா்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் சு.ரவி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் ஆா்.கமலக்கண்ணன், அதிமுக அமைப்புச் செயலா் கோ.அரி உள்ளிட்ட நிா்வாகிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.