மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு
சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில் தங்கி தியாகராய நகரில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தாா். வழக்கம்போல், பணிக்கு செல்வதற்காக திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மாம்பலம்-கோடம்பாக்கம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மாம்பலம் ரயில்வே போலீஸாா், உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.