செய்திகள் :

சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; மதுரையில் அதிர்ச்சி!

post image

நீண்டகால தீவிர ரசிகர் தலைக்கு துப்பாக்கியால் குறி பார்த்த தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலரின் செயல், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

கொடைக்கானல் பகுதியில் நடந்துவரும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விமானம் மூலம் கடந்த 1-ம் தேதி மதுரைக்கு வந்தார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``படப்பிடிப்புக்குச் செல்வதால் தொண்டர்கள் யாரும் வாகனத்தில் பின் தொடரவோ, வாகனத்தின் மீது ஏறவோ இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கவோ வேண்டாம்" என அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மதுரையில் அவரை வரவேற்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டு வந்து விமான நிலையத்தை திக்குமுக்காட வைத்தனர். அங்கிருந்து நான்குவழிச் சாலை வரை 2 கிலோ மீட்டர் தூரம் விஜய் மீது பூக்களை தூவிக்கொண்டு உடன் சென்றனர். அதனால் ரோடுஷோ போல விஜய் பயணித்தார்.

கொடைக்கானல் படப்பிடிப்பு பணிகள் முடிந்து நேற்று (மே 5) சென்னைக்குச் செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோதும், அவரைக் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

விஜய்

அப்போது பாதுகாவலர்களுடன் காரிலிருந்து இறங்கி வந்த விஜய்க்கு துண்டு அணிவிக்க ஒரு ரசிகர் வேகமாக வந்தார். அதைப் பார்த்த பாதுகாவலர்களும், பவுன்சர்களும் அவரைத் தடுத்தனர். அப்போது பாதுகாவலர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து, அந்த ரசிகரின் தலையை நோக்கி குறி வைத்துள்ளார். அப்போது அந்த பரபரப்பில் இதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், அங்கு நடந்தது வீடியோவில் பதிவாகியுள்ளதைப் பார்த்த ஊடகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

`நடிகர் என்பதைக் கடந்து அரசியல் தலைவராகியுள்ள விஜய், தனக்கு துண்டு போட வந்த ரசிகரின் தலையில் துப்பாக்கி வைக்க பாதுகாவலருக்கு உத்தரவிட்டுள்ளாரா?'... `இவர் எப்படி தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை நேரடியாகச் சந்திப்பார்? இது போன்ற சம்பவம் எந்த தலைவர் முன்னிலையிலும் இதுவரை நடந்ததில்லை' என்று பொதுமக்கள் பொங்கி எழும் வகையில், அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரசிகரின் தலையில் துப்பாக்கி

இந்த நிலையில் துப்பாக்கி தலையில் வைக்கப்பட்ட அந்த ரசிகர் மதுரையைச் சேர்ந்த இன்பராஜ் என்றும், இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதாகவும், விஜய்க்கு எப்படியும் சால்வை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்து விஜய் வந்ததும் சால்வை அணிவிகக சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.

``ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க காரணமே மோடி தான்” - வானதி சீனிவாசன் பெருமிதம்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் பொது மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து பாஜக சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கோவை, தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக... மேலும் பார்க்க

``ஹீரோ திமுக, வில்லன் அதிமுக; மற்றவர்கள் குறுக்க மறுக்கா..!’ - எம்.எம்.அப்துல்லா

"ஒரு படம் எடுத்துகொண்டால், ஹீரோவும், வில்லனும் தான். அப்படி, ஹீரோ தி.மு.க... வில்லன் அ.தி.மு.க அவ்வளவுதான். குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள். அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள ... மேலும் பார்க்க

'மாபெரும் வீரன்; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தலைவணங்குகிறேன்' - நயினார் நாகேந்திரன்

'சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதைக்கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் எழும்பூரில் கண்டன ஆர்ப்ப... மேலும் பார்க்க

Mock Drills: `நாடு தழுவிய அவசரகால பாதுகாப்பு ஒத்திகை' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இரண்டு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடு... மேலும் பார்க்க

முதல்வர் பதவி: `இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கு யோகமில்லை’ - அஜித் பவார் வருத்தம்

மகாராஷ்டிராவில் அதிக நாட்கள் துணை முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அஜித் பவாரை தான் போய் சேரும். எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித்பவாரால் அப்பதவிக்கு வரமுடியவி... மேலும் பார்க்க

'மண், மலை, கடல் வளங்கள் அதானிக்கு சொந்தம் என்பதே பாஜக கொள்கை' - பொன்னாருக்கு மனோ தங்கராஜ் பதிலடி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பா.ஜ.க தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்கு, மக்களை குழ... மேலும் பார்க்க