ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!
ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீர்த்த குட ஊர்வலம்
ஆத்தூரில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா, தேர் திருவிழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெருவில் பிரசித்தி பெற்ற தர்மராஜர் திருக்கோயில் திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. கோயிலில் தீமிதி பெருவிழா மற்றும் தேர் திருவிழா கடந்த 27ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கியது.
இந்த நிலையில் தீமிதிபெருவிழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதியிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் ஊர்வலமானது. கோயில் வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலையில் வழியாக சென்று கோயிலில் உள்ள திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
திருமணம் தடை நீங்க குழந்தைப் பாக்கியம் பெற பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.