செய்திகள் :

காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதல்: 3 பேர் பலி!

post image

காரைக்குடி அருகே அரசுப் பேருந்தும் பால் வாகனமும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம், கருணா தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பால் வாகனத்தை ஓட்டி வந்த ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துநர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த பயணிகளில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை சுமார் 3 மணி அளவில் நடந்த இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?

தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எ... மேலும் பார்க்க

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ராஜஸ்தா... மேலும் பார்க்க

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெய்யில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய... மேலும் பார்க்க

ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடை... மேலும் பார்க்க

சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!

சிவகங்கை: சிவகங்கை அருகே மயானத்துக்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி க... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்‌. குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக... மேலும் பார்க்க