தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டா மலைகளின் வனப்பகுதியில் திங்கள்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது, அங்குப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழு இரண்டு வாரங்களுக்கும் மேலாக, நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் அவரிடமிருந்த 303 துப்பாக்கியையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.
ஏப்ரல் 21 முதல் தொடங்கப்பட்ட எண்கவுண்டர் நடவடிக்கையில் இதுவரை 4 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.