செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!

post image

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினஸ் நர்வாலின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

நர்வாலின் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தில்லியிலிருந்து ஹரியாணா மாநிலம் கர்னலுக்கு வந்தடைந்தார்.

அதன்பின்னர், கர்னலில் உள்ள நர்வாலின் இல்லத்தை அடைந்தார். ​​காங்கிரஸ் தலைவர்களில் ரோஹ்தக் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடாவும் உடனிருந்தனர்.

கடந்த ஏப்.22ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற இருவர் கங்கையில் மூழ்கி பலி!

ஐஐடியில் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற இரு இளைஞர்கள் கங்கையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே கங்கையில் க... மேலும் பார்க்க

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்கிற சந்தேகத்தை அவர் மீது எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.பஹல்காம் ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப்பின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

பஞ்சாப் மாநிலத்தின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களினால் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

தெலங்கானா: சத்தீஸ்கரின் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த 14 மாவோயிஸ்டுகள் தெலங்கானா மாநில காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளனர். தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுதெம் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான் பி.ரோஹித் ராஜுவின் முன்னி... மேலும் பார்க்க

பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை வி... மேலும் பார்க்க