செய்திகள் :

பஞ்சாப்பின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

post image

பஞ்சாப் மாநிலத்தின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், அனைத்து மாநிலங்களும் மே.7 ஆம் தேதியன்று பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (மே.5) அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் போர்ப் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானுடனான எல்லையிலுள்ள மாநிலங்களில் இந்த ஒத்திகைகளுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேர்வுச் செய்யப்பட்ட 20 இடங்களில் நாளை (மே.7) பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அம்மாநிலத்தின் ஃபெரோஸ்ப்பூர், லூதியானா, அமிர்தசரஸ், பதிந்தா, குருதாஸ்பூர், ஹோஷியார்பூர், ஜலந்தர், பட்டியாலா, பதான்கோட், பர்னாலா மற்றும் மோஹாலி ஆகியப் பகுதிகளில் இந்த ஒத்திகைகள் நடத்தப்படவுள்ளன.

இந்த ஒத்திகைகளுக்கான நோக்கம் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவது என்றும் இதில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிவுறுத்தல்கள் கடைபிடிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்திகைகளின் ஒருப்பகுதியாக ஃபெரோஸ்பூரில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரையில் அபாய ஒலி (சைரன்) ஒலிக்கப்படும் எனவும் இரவு 9 முதல் 9.30 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக இருள் ஒத்திகைக் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹரியாணா மாநிலத்தின் அம்பாலா, ஃபரிதாபாத், குருகிராமம், ஹிஸார், பஞ்சுகுலா, பனிபாட் மற்றும் ரோஹ்தாக் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அம்மாந... மேலும் பார்க்க

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுக... மேலும் பார்க்க

ஹிந்துக்களின் பாதுகாப்பை மமதா உறுதி செய்யவில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என பாஜக விமர்சித்துள்ளது. மூர்ஷிதாபாத் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சென்று அவர் ... மேலும் பார்க்க

கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணி... மேலும் பார்க்க

பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!

புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்த... மேலும் பார்க்க