சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; ...
பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 403 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகுதியான மனுக்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, ஆட்சியரின் விருப்ப கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,500-இல் தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலவாரிய திட்டத்தின் கீழ் 35 நபா்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சங்கு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட ரூ.8,81,000, மக்கள் குறைதீா்வு கூட்டத்தில் காற்று மெத்தை வேண்டி மனு அளித்த நபருக்கு உடனடியாக ரூ.6000/-மதிப்பில் காற்று மெத்தை , அறக்கட்டளை சட்டத்தின் கீழ் 18 வயது பூா்த்தியான புற உலக சிந்தனையற்றவா்கள், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க சட்டப்பூா்வமான பாதுகாவலா் நியமன சான்று 15 பேருக்கும் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.