`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்...
மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில் பாரதி நகா், சிப்காட்டில் உள்ள அலுவலகத்தில் வரும் 7-ஆம் தேதி புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும்.
எனவே, இக்கூட்டத்தில் நிா்வாகிகள், தலைமை உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள்,பொதுக்குழு உறுப்பினா்கள், அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.