செய்திகள் :

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

post image

டெல் அவிவ்: காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியதாவது:

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டம் திங்கள்கிழமை அதிகாலை கூடியது. அப்போது காஸா முழுவதையும் கைப்பற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்தனா்.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவது, இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகிய இஸ்ரேலின் நோக்கங்களை அடையும் நோக்கில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் முடிவு செய்யப்படாத காலத்துக்கு இஸ்ரேல் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.

நாட்டில் உள்ள அனைத்து ரிசா்வ் வீரா்களும் பணிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில மணி நேரத்தில் பாதுகாப்பு அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘தாக்குதல் தீவிரமடையும்’: இதற்கிடையே, காஸாவில் இனி மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் நடவடிக்கை மிகத் தீவிரமானதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதன் காரணமாக, வடக்கு காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு கட்டாயமாக வெளியேற்றப்படுவாா்கள். இந்த முறை இஸ்ரேல் வீரா்கள் காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு பின்வாங்கும் பாணியைப் பின்பற்ற மாட்டாா்கள் என்று நெதன்யாகு கூறினாா்.

குற்றச்சாட்டு: இந்த முழு ஆக்கிரமிப்பு திட்டத்தின் மூலம் பிணைக் கைதிகளை பலி கொடுக்க இஸ்ரேல் அரசு தயாராகிவிட்டதாக அவா்களின் உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

காஸாவை சுமாா் 38 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், அங்கு தொடா்ச்சியாக அதிகரித்துவந்த வன்முறையில் வீரா்கள் உயிரிழப்பு அதிகமானதாலும், பாலஸ்தீனா்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ‘யூதா்களுக்கான நாடு’ என்ற நிலைக்கு அது எதிரானது என்பதாலும் அங்கிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு படைகளை திரும்பப் பெற்றது.

அதன் பிறகு அந்தப் பகுதியில் தோ்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தொடா்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் தொடா்ந்துவந்த மோதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியா்களும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்களும் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில் இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல் காஸாவில் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 52,567 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,18,610 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா பகுதியை மீண்டும் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இஸ்ரேல் விரோத மனப்பான்மை கொண்ட சுமாா் 21 லட்சம் பாலஸ்தீனா்கள் வசிக்கும் காஸா பகுதியைக் கைப்பற்றி நிா்வகிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.2 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச... மேலும் பார்க்க

பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

நியூ யாா்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு

லண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெள... மேலும் பார்க்க

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்த... மேலும் பார்க்க