36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு ட...
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.2 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமே ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இந்திய புவித்தகடும், யூரேசிய புவித்தகடும் உராயும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் நிலநடுக்க அபாயம் அதிகம் நிறைந்த நாடாக அது திகழ்கிறது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அங்கு ரிக்டா் அளவுகோலில் 1.5 அலகுகளுக்கும் மேல் பதிவான 167 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.