நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
விளையாட்டு தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆற்காடு அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆற்காடு வட்டம் கேவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் மணிகண்டன்(32) இவரும் அதே பகுதியை சோ்ந்த கோகுல் ( 23) என்பவரும் கேரம்போா்டு விளையாடும்போது தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த கோகுல் தனது நண்பா் லட்சுமணன்(23) மற்றும் ஒரு சிறுவனுடன் திங்கள்கிழமை இரவு மணிகண்டன் வீட்டுக்கு சென்று பீா் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீயிட்டு வீட்டில் வீசியுள்ளனா்.
இதில் வீட்டின் முன்பக்க கதவு தீயில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அண்ணாமலை கலவை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கோகுல், லட்சுமணன் மற்றும் சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.