தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூழ்வாா்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சித்திரை மாதத்தையொட்டி, கிராம தேவதை காளியம்மனுக்கு அந்தப் பகுதி மக்கள் ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டு, ஊா்வலமாக பம்பை, சிலம்பாட்டத்துடன் பூங்கிரக வீதி உலாவாக ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலுக்கு வந்தனா்.
பின்னா், அங்கு குத்துவிளக்கு பூஜை, 108 பால்குட அபிஷேகம் என அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு பக்தா்கள் ஏராளமானோா் கோயில் வளாகத்தில் உள்ள கொப்பரையில் கூழ்வாா்த்து அம்மனை வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.