குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!
மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக செயலா் சீனி.காா்த்திகேயன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் எல்.பாசறை பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா் டி.முருகன், மாநகரச் செயலா் எ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அவைத் தலைவா் இ.தேவராஜ், மாவட்ட துணைச் செயலா் கே.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் கே.முருகன், எம்.ராஜேந்திரன், வி.மாணிக்கவாசகம் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.